• 5 years ago
தினமணி - மகளிர் மணி சார்பாகவும் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் திரையுலகில் சாதனை புரிந்த அரும்பெரும் நடிகைகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரங்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. தினமணி சார்பாக ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது போல இனி ஆண்டுதோறும் திரைத்துறையில் சாதனை புரிந்து வரும் நடிகைகளுக்கும் விருது வழங்கிக் கெளரவிக்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படும் என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.

தினமணி நட்சத்திர சாதனையாளர் விருதுகளுக்கு இந்த ஆண்டு பழம்பெரும் நடிகைகள் வைஜெயந்திமாலா, செளகார் ஜானகி, ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ, கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் இந்த ஒன்பது நடிகைகளுக்கும் ஆளுநர் கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு, பதக்கமும், பாராட்டுப் பத்திரமும், பொற்காசுகளும் வழங்கப்பட்டன.

Category

🗞
News

Recommended