• 6 years ago
#Era.Murukanspeech #Eramurukaninterview #interviewwithEramurukan

ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறுநாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும் ? நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக்க கிடைப்பதில்லை. அவை எழுதப்படுவதே இல்லை என்பது தான் காரணம்.
எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்துக்கள் சுகமான ஒரு வாசிப்பனுவத்தை அளிக்கிறது இந்தத் தொகுப்பு. அவருடைய கதைகள் ஒவ்வொன்றும் எளிய மொழியில் இயல்பாக விரிந்து செல்லும் அதே சமயம், மறக்க முடியாத ஓர் இலக்கிய படைப்பாகவும் இன்னொரு தளத்தில் உயர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் அபூர்வமாகவே இங்கே நிகழ்கின்றன. இரா.முருகன் தன் படைப்புக்களைக் குறித்து இக்காணொளியில் விரிவாகப் பேசியுள்ளார்.

நேர்காணல் - உமா ஷக்தி

ஒளிப்பதிவு - ஆர்.ராகேஷ் குமார்

படத்தொகுப்பு - ஹேம்நாத் லட்சுமணன்

Category

🗞
News

Recommended