• 6 years ago
#vamsipublishers #directorbalumahendra #kvshylaja #umapreman #namuthukumar #tamilpublishers

தமிழில் பெண் பதிப்பாளர்கள் வெகு குறைவு. ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் இத்துறையில் தனது கணவருடன் இணைந்து சரிநிகர் சமானமாக இலக்கியக் கூட்டங்கள், கதையாடல், மொழிபெயர்ப்புகள், புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு அவர் தம் எழுத்துக்களை பண்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல் என பதிப்புத் துறையில் அசத்திக் கொண்டிருக்கிறார் கே.வி ஷைலஜா. 19. டி.எம்.சாரோன், திருவண்ணாமலையில் இருக்கும் இவர்களின் வீடென்பது தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மிக விருப்பமான புகலிடமாகப் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. இவர்களது வாழ்க்கை பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். எழுத்தும், வாசிப்பும், அவை குறித்த தொடர் பகிர்தலுமாக இப்படி ஒரு வாழ்க்கையை நாமும் வாழக்கூடாதா என்ற ஏக்கம் இவர்களைப் பார்க்கும் பலருக்கும் வரலாம். ஆனால் அந்தப் பெருமைகள் ஏதும் ஷைலஜாவின் மூளைக்குள் ஏறியிருப்பதாகத் தெரியவில்லை. வெகு யதார்த்தமான மிக மிக ஆத்மார்த்தமான மனுஷியாக தான் வாசித்த, தான் பதிப்பித்த, தான் பழகிய மனிதர்கள் குறித்து அவர் பகிரும் போது அவர்களது வெற்றிக்கான காரணம் பிடிபட்டது.

வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக அல்ல படைப்பாளியாகவே என்றென்றும் தன்னை முன் நிறுத்திக் கொள்ள விழையும் ஷைலஜாவுடனான இந்த ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் உரையாடலின் நடுவே இயக்குனர் பாலுமகேந்திரா, மலையாளர் கவிஞர் மாதவிக்குட்டி, மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார், நடிகர் சிவக்குமார், திலகவதி ஐ பி எஸ், கேரளப் பிரபலமும் கதை கேட்கும் சுவர்கள் நாவலின் மூலமுமான களப்பணியாளர் உமா பிரேமன், மலையாளப் படைப்பாளிகள் பலர் என இடையிடையே ஊடாடிச் செல்ல நேரம் பற்றிய பிரஞ்சையே இன்றி சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது.

இது ஷைலஜாவுடனான நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே!

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று வெளியாகும்.

விருந்தினர்: கே.வி.ஷைலஜா, பதிப்பாளர்& மொழிபெயர்ப்பாளர்.

சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன் , பத்திரிகையாளர்.

ஒளிப்பதிவு: ராகேஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Category

🗞
News

Recommended