• 2 years ago
பிரான்சில் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் புகழுடல் இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.

இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப் பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளருமான பணியாற்றியிருந்தார்.

2002 ஆம் ஆண்டு லாக்கூர்னேவ் மாநகரத்தில் உருவான தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இணைந்து தன் பணியைத் தொடங்கியவர். 2007 ஆம் ஆண்டில் மனித நேயச் செயற்பாட்டாளர்களின் கைதுகள், கெடுபிடிகளுக்கு மத்தியில் உறுதியுடன் நின்று தேசக்கடமையினைச் சிறப்பாக முன்னெடுத்த சூழமைவில், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளரால், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் உபசெயலாளராகவும் பின், தேர்வுப்பகுதிப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, தன் கடமையை முன்னெடுத்து உடல்நலக் குறைவினால் ஓய்வுபெறும் வரை அர்ப்பணிப்போடு தனது பணியைச் சிற்பாகச் செய்திருந்தார்.

இவர், தமிழ்ச்சோலைப் பணியகத்தின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, ஆசிரியர்களுக்கான பட்டறைகளை நடாத்துவது, மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் வாத்திய அணிகளை அணியஞ்செய்வது, தமிழ்ச்சங்கக் கூட்டங்களை நடாத்துதல், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என பல்துறைசார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து தாயக விடுதலைக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தவர் என்பது நினைவூட்டத்தக்கது.

Category

🗞
News

Recommended