• last year
கோவை : 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவுவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார்பந்தயப் போட்டி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது அதில் பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர் இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு பெற்றது 35 ஆவது ஆண்டாக முடிவு பெற்ற இந்த போட்டியின் நிறைவு விழா கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இந்த விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை அரூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் ராவ் சதீஷ் ராஜகோபால் ஆகியோர் தட்டிச் சென்றனர், மேலும் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு பலரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது அவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசும் அடுத்த ஆண்டிற்கான போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது

2024ஆம் ஆண்டிற்கான சீசனில் ஆறு சுற்றுகள் நடைபெற உள்ளது இதனை ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்த உள்ளது முதல் சுற்று மார்ச் 15 முதல் 17 ஆம் தேதி வரை சவுத் இந்தியா ஏழை என்ற பெயரில் சென்னையிலும் இரண்டாவது சுற்று மே 31 முதல் ஜூன் 2 வரை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் மூன்றாவது சுற்று ஜூன் 21 முதல் 23 வரை ஹைதராபாத் பகுதியிலும் நான்காம் சுற்று ஜூலை 26 முதல் 28 வரை கோவை மாவட்டத்திலும் ஐந்தாம் சுற்று நவம்பர் 22 முதல் 24 வரை கூர்க் பகுதியிலும் ஆறாம் சுற்று டிசம்பர் 13 முதல் 15 வரை பெங்களூரில் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து நிறைவு விழாவும் நடைபெறுகிறது இது இந்தியாவின் முக்கிய நகரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News

Recommended