• last year
கோவை மண்டலத்தில் தனது 31 வது கிளையாக மகாராஷ்டிரா வங்கி தனது மிட் கார்ப்பரேட் கிளையை துவக்கியது..

தென் மாநிலங்களில் வருவாயை அதிக படுத்தும் விதமாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது கிளைகளை அதிகபடுத்ரி வருகிறது.அந்த வகையில் கோவை மண்டலத்தி்ல் தனது 31 வது கிளையாக மகாராஷ்டிரா வங்கி தனது மிட் கார்ப்பரேட் கிளையை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் துவக்கியது..மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினராக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மனித வள மேம்பாட்டு துறையின் பொது மேலாளர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு மிட் கார்ப்பரேட் கிளையை துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்பரேட் வாடிக் கையாளர்கள் மற்றும் பெரும் வணிக வாடிக் கையாளர்களின் தேவை களைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கிளை துவங்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர்,கோவை மண்டலத்தில் 2000 கோடி அளவில் வணிகம் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர்,இது ஐயாயிரம் கோடியாக உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.. அனைவரும் இந்த புதிய கிளையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்,கடன்,லாக்கர் சேவை,என்.ஆர்.ஐ. சேவைகள் என வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து தரும் வகையில் எங்களது வங்கி ஊழியர்கள் செயல்படுவார்கள் என தெரிவித்தார்..

Category

🗞
News

Recommended