• 8 years ago
ஆண்களுக்கும் சில பெண்கள் செக்ஸ் தொல்லை கொடுத்துவருகிறார்கள் என நடிககை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தாம்தூம், காஞ்சனா 2, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள ஜூலி 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் இதுவரை 5 முறை காதலில் விழுந்திருப்பதாக கூறினார். 5 காதல்களும் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் ராய் லட்சுமி கூறியுள்ளார். ஆனால் தான் காதல் வயப்பட்டவர்களின் பெயர்களை கூற முடியாது என்றும் ராய் லட்சுமி தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் காதல் தோல்வி அடையும்போது, தன் ரூம் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்துகொண்டு பயங்கரமாக அழுததாகவும் அவர் தெரிவித்தார். ஆண்களில், நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள், கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்றும் ராய் லட்சுமி கூறினார். ஆர்யா என் நெருங்கிய நண்பர் என்ற அவர், தங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக வெறும் நட்பு மட்டும்தான் இருந்து வருகிறது என்றார்.

Actrees Rai lakshmi said Some woman gives sexual torture to men. She said she dont know Politics and she will not come to politics.

Category

🗞
News

Recommended