பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கவில்லை- வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா கைரேகை வழக்கில் பெங்களூரு அக்ரஹாரா சிறை அதிகாரி மோகன்ராஜ் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைசென்றபோது கைரேகை எதுவும் பதிவு செய்யவில்லை என்று மோகன்ராஜ் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மறுதேர்தல்களில் அதிமுகவினரின் வேட்பு மனுக்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதில் கைரேகை வைக்கப்பட்டது. தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். அதிமுக வேட்பாளர் தனது வேட்பு மனுவின் ஏ, பி படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றதில் முறைகேடுகள் இருப்பதால் போஸின் வேட்புமனுவே செல்லாது என்பதுதான் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கின் நோக்கம். இந்த வழக்கு பல கட்டங்களில் பரபரப்பான விசாரணைகளை கடந்துள்ளது. கையெழுத்து பெற்ற டாக்டர் பாலாஜி ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். தேர்தல் மனுவில் இருக்கும் ஒரு பகுதியை சுட்டிக் காட்டிய நீதிபதி, தாமாகவே முன் வந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு ஒரு சம்மனை அனுப்ப உத்தரவிட்டார்.



Bangalore Jail officer Mohanraj has said that they haven't registered the thumb impression of late Jayalalitha when she was lodged in Parappana Agrahara prison.

Category

🗞
News

Recommended