• 8 years ago
ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொண்ட பெண் அம்ருதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மரணமடைந்துவிட்டார். அவருக்கு சென்னை மெரினாவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் தாங்கள் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும், மகன் ஜெ. தீபக்கும் கோரி வருகின்றனர்.அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் உரிமை கோருகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த மனு இன்று விசாரணைக்கும் வருகிறது.
அந்த மனுவில் 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன். தனது பெயர் அம்ருதா என்கிற மஞ்சுளா ஆகும். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர்தான் ஜெ,வுக்கு பிரசவம் பார்த்தார். பின்னர் நான் தத்து கொடுக்கப்பட்டேன்.

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் இந்த உண்மையை மறைத்தேன். தற்போது வளர்ப்பு தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் உண்மையை கூறுகிறேன்.

எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து அவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இரு மரபணுகளையும் சோதனை செய்து நான்தான் ஜெ.வின் மகள் என அறிவிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் உடலை தகனம் செய்யும் போது அவருக்கு வைஷ்ணவ அய்யங்கார் பிராமண முறைப்படி இறுதி சடங்குகள் செய்யவில்லை. அதனால் தற்போது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அம்ருதா கோரியுள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்பது தெரியவில்லை.

A Banglore girl whose name is Amrudha claims that she is the daughter of Jayalalitha who died last year. She also files plea in Supreme court, which the same is taking for hearing today.

Category

🗞
News

Recommended