• 8 years ago
சேலத்தில் காணாமல் போன 2 மாணவிகள் ஓட்டலின் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 2வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் மாடியில் இருந்து 2 பேரும் குதித்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரிசிபாளையம் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த கவிஸ்ரீ, ஜெயராணி நேற்று காணாமல் போயினர். மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இரவு முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

சேலம் அக்ரஹாரம் பகுதியில் பூட்டிக்கிடந்த ஒரு விடுதியில் பின்புறமாக ஏறிச்சென்று 4வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஜெயராணி தலை உடைந்து உயிரிழந்தார்.

மற்றொறு மாணவி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்கமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கண்ணீருடன் காத்துக்கொண்டுள்ளனர்.

மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். இருவரும் பேசிக்கொண்டே இருந்ததால் ஆசிரியை இடம் மாற்றி அமர வைத்தாராம். இதனால் மனமுடைந்த மாணவிகள் மாயமானதாக கூறப்படுகிறது. மாணவிகளின் தற்கொலைக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Category

🗞
News

Recommended