• 7 years ago
உடுமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரை சேர்ந்தவர் சி.டி.முருகன். 55 வயதான இவர் எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் பானுபிரியா என்ற மகளும் உள்ளனர். பானுபிரியா பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 3 பேரும் உடுமலை ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பின் பகுதியில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்
மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் மகன் அண்மையில் வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Category

🗞
News

Recommended