• 7 years ago
மூன்று மாநிலங்களில் பாலியல் தொழில் செய்து வந்தவர் சோனு பஞ்சபான். இந்த பெண்ணை கைது செய்தும் போலீஸ் இவருக்கு எதிராக சாட்சியம் இல்லாமல் திணறி வந்தது. ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் இவர் சாட்சிகள் இல்லாமல் எளிதாக தப்பி இருக்கிறார். இந்த நிலையில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் டெல்லியில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் இவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இவரது வாக்குமூலத்தை விட அதற்கான காரணம் போலீசை மிகவும் சிலிர்ப்படைய வைத்து இருக்கிறது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்கு ஒன்றும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி, உத்தர பிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய பாலியல் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தவர் சோனு பஞ்சபான். இவரை கடந்த 2011ம் டெல்லி போலீஸ் கைது செய்தது. ஆனால் இவருக்கு எதிராக சரியான சாட்சியம் எதுவும் இல்லை என்று 2014ல் இவர் விடுவிக்கப்பட்டார். அதற்கு பின் கைது செய்யப்பட்டு சாட்சியம் இல்லாமல் மீண்டும் விடுவிக்கப்பட்டார்.

Category

🗞
News

Recommended