• 8 years ago
லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் தெரிய வந்துள்ளது. பூசினாற் போன்று இருந்த லட்சுமி மேனன் வெயிட் போட்டு குண்டானார். றெக்க படத்தில் அவர் குண்டாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். வெயிட் போட்ட காரணத்தால் பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
பிரபுதேவாவின் யங் மங் சங் படத்தை தவிர லட்சுமி மேனன் கையில் புது படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
லட்சுமி மேனன் தான் ஸ்லிம்மானதை செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனனா இது வாவ் வவ்வாவ் என்று வியந்தனர்.
வழக்கமாக நடிககைகள் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள், ஜிம்மே கதி என்று கிடப்பார்கள். ஆனால் லட்சுமி மேனன் வேறு விஷயத்தை பின்பற்றியுள்ளார்.
லட்சுமி டான்ஸ் ஆடி ஆடி ஆடியே உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைக்க, மெயின்டெய்ன் செய்ய பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் நடனத்தை தான் நம்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.



Actress Lakshmi Menon's weight loss secret is revealed. She was not on a diet as she is not fond of it. Instead she danced really really hard to shed that extra kilos.

Category

People

Recommended