• 7 years ago
உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து பருமனுடன் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் பருமன் குறையாது. இந்த நிலையை நீர்க்கட்டு அல்லது திரவக் கோர்வை என்று அழைப்பர். உங்கள் பாதம், கை கால் விரல்கள், கைகள் மற்றும் மூட்டுக்கள் காரணமின்றி வீங்கி காணப்படுகிறதா? அப்படியெனில் கவனமாக இருங்கள். பொதுவாக இம்மாதியான நிலையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திப்பார்கள். மேலும் உடலுழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இம்மாதிரியான பிரச்சனை வரக்கூடும். சரி, ஒருவருக்கு திரவக் கோர்வை எந்த காரணங்களால் வரக்கூடும்? உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றால் வரும். சரி, நீர் தேக்கத்தால் உடல் பருமனடைவதை எப்படி தடுப்பது என்று கேட்கலாம். நிச்சயம் ஒருசில உணவுகளின் மூலம் நீர் உடம்பைக் குறைக்க முடியும். கீழே நீர் உடம்பைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் உடல் பருமனைக் குறைக்கலாம். முட்டையில் உள்ள அதிகப்படியான புரதம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளது. உடலில் அதிக அளவில் நீர் உள்ளவர்கள் தினம் முட்டையை காலை உணவாக மிகச் சிறந்தது. ஏனெனில், முட்டை உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். குறிப்பாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்தது.

There are certain foods that helps in fighting fluid retention weight. Know about these foods here on Tamil Boldsky.

Recommended