பதவியை காப்பாற்றி கொள்ள பானுரேகா காலில் விழுந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர்- வீடியோ

  • 7 years ago

பெரிய பாண்டியின் மனைவி காலில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தனது பதவியை காப்பாற்றி கொள்ளவே விழுந்து கதறி அழுதுள்ளார் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியில் நகை கடையில் கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடலில் பாய்ந்த குண்டு உடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்து வெளியானது என்பது தெரிய வந்தது. கொள்ளையர்களுக்கும் தனிப்படை போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டி மீது பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பெரிய பாண்டியின் உயிரிப்பு குறித்து இன்ஸ்பெக்டர் முனி சேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக காவல்துறை அதிகாரிகளும் துப்பாக்கி சூடு சம்வம் குறித்து முனிசேகரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். பணியின் போது அஜாக்கிரதையாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வரும் நிலையில், உயிரிழந்த பெரியபாண்டியின் மனைவியிடம் காவல்துறை அதிகாரிகள் முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர். அப்போது அவர் தன் கணவர் உயிரிழப்பிற்கு காரணமான முனிசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினால் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து முனிசேகர் நிரந்தரமாக சஸ்பென்ட் செய்யப்படுவார். ஒருவேளை பெரியபாண்டியின் மனைவி முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உயரதிகாரிகளிடம் தெரிவித்தால் முனிசேகரை பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு காவல்துறையில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார். தனது பதவி பறிபோவதும் இருப்பதும் பெரியபாண்டியின் மனைவியின் கையில் தான் உள்ளது என்பதை அறிந்த முனிசேகர் வேறு வழியின்றி பெரியபாண்டியின் மனைவியின் காலில் சென்று விழுந்து கதறி அழுதுள்ளார். முனிசேகர் அழுவதை பார்த்து கரைந்த பெரிய பாண்டியின் மனைவி பானுரேகா மன்னிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூற உள்ளதாகவும் முடிவெடுத்துள்ளார்.

Recommended