• 7 years ago
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றபிறகு நடிகையாக இந்திய சினிமாவில் கலக்கியவர் சுஷ்மிதா சென். தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறார். அடிக்கடி அவரை பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும். இந்நிலையில் சுஷ்மிதா சென் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் சுஷ்மிதா சென். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு வெளிவந்த 'நோ பிராப்ளம்' என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சினிமா பக்கம் வரவேயில்லை

இந்நிலையில் மும்பையில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷ்மிதாவிடம், நீங்கள் எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், "நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவை ஏற்படும் போது நிச்சயம் நடிப்பேன்." என்று கூறினார்.

Category

🗞
News

Recommended