அனைவரையும் ஈர்த்த விக்கெட் கீப்பர்கள்.. புலம்பும் யுவராஜ் : ஐபிஎல்

  • 6 years ago
6 பால்களில் 6 சிக்சர்களை லெப்டிலேயே அடித்து நொறுக்கியவர், ஒருதின ஸ்பெஷலிஸ்ட், பஞ்சாப் யுவராஜா என்றெல்லாம் பெயர் பெற்றவர் யுவராஜ் சிங். ஆனால், ஐபிஎல்லில் அவருடைய நிலைமை தலைப்பை போல் மாறிவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமை யுவராஜ் சிங்குக்கு உண்டு. 2015ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மற்ற அணிகள் கைவிட்ட நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அவரை எடுத்து ஆறுதல் அளித்தது. முதல் இரண்டு சீசன்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும், ஐகான் வீரராகவும் இருந்தார். மூன்றாவது சீசனில்இரண்டையும் இழந்தார். பின்னர் டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் என பல அணிகளுக்காக விளையாடினார். இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை செய்தவரை இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியே மீண்டும் ஏலம் எடுத்துள்ளது.

Category

🥇
Sports

Recommended