• 7 years ago
டிடி நடித்துள்ள உலவிரவு பாடல் டீஸரே செம ஹிட்டாகியுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினில்ஸ் மூலம் சிங்கிள் பாடல்களை வெளியிடுகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு உலவிரவு பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

தூரத்துக் காதல்
என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் -உன்
மெய் முத்தம் போலே அல்ல

காதலி!
என்னோடு வா உலவிரவு!

என்கிற அந்த பாடலை மதன் கார்க்கி எழுத கார்த்திக் பாடியுள்ளார். உலவிரவு பாடல் வீடியோவில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி நடித்துள்ளார். வீடியோவில் ஸ்பெஷல் கெஸ்ட் ஒருவரும் உள்ளாராம். அந்த கெஸ்டை காதலர் தினத்தன்று தான் தெரிந்து கொள்ள முடியும்.

Popular VJ DD's Ulaviravu song teaser is a hit among the audience. Director Gautham Menon's Ondraga originals has released it. Full song will be released on Valentine's day

Category

🗞
News

Recommended