ஆர் எம் எஸ் டைட்டானிக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகளை ஏற்றிக் கொண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது1912 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினைந்தாம் தேதி அன்று அதிகாலை கடலில் மூழ்கியது. ஐஸ் பாறையில் மோதி விபத்திற்க்குள்ளானது என்று சொல்லப்பட்டது. அந்த காலத்தில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு பயணித்த மிகப்பெரிய கப்பல் டைட்டானிக் மட்டும் தான். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்திருந்தார்கள். அதோடு கப்பல் பயணம் என்பது மிக சாதரணம சாமானிய மக்களுக்கு எல்லாம் வாய்த்திடாது. உலகத்திலேயே மிகப்பெரும் பணக்காரார்களாக இருந்த செல்வந்தர்கள் தான் பெரும்பாலும் அந்த கப்பலில் இருந்திருக்கிறார்கள். சொகுசு வாழ்க்கைக்காகவும், வியாபாரத்திற்காகவும் தான் அந்தக் கப்பலில் அமெரிக்காவிற்கு பயணப்பட்டிருக்கிறார்கள்.
Category
🗞
News