des:வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மூழ்கி கிடக்கிறது வெனிசூலா. பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். படு பயங்கரமான பண வீக்கமே இந்த அவல நிலைக்குக் காரணம். பொருட்கள் வாங்கவும், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கும் அங்குள்ள மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பொருளாதாரம் படு மோசமாகியுள்ளது. கையில் பணம் இல்லாததால் பண்ட மாற்றில் மக்கள் இறங்கியுள்ளனர். முடி வெட்ட காசுக்குப் பதில் 5 வாழைப்பழம், 2 முட்டை தருகிறார்கள். சிகரெட் பாக்கெட்டுகளை கட்டணமாக கொடுத்து டாக்சிகளில் பயணிக்கிறார்கள்.
Category
🗞
News