• 6 years ago
நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மகள் ஐஸ்வர்யா கூற கேட்டதால் இடிந்து போன கண்ணன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மரணமடைந்தார். நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வால் கிராமப்புற, மாநில பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகிவிடும் என்று பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது.


Neet: Kannan belongs to Sivagangai district gets cardiac arrest when he gets reply from her daughter Iswarya that the exam was very tough.

Category

🗞
News

Recommended