பெண்களை தனது கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நடிகை ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஜீவிதா மீது சமூக ஆர்வலர் சந்தியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஜீவிதா பல இளம் பெண்களை கட்டாயப்படுத்தி தனது கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு அனுப்பியதாக டிவி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தார் சந்தியா.
இந்நிலையில் ஜீவிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
சந்தியா கூறியதில் எதுவும் உண்மை இல்லை. சந்தியா தனது புகாரை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சந்தியா மற்றும் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய டிவி சேனல் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.
திரையுலக பிரபலங்கள் என்றால் மிகவும் சீப்பானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் சந்தியா. யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தை அல்ல.
கதுவா சிறுமிக்கு நடந்தது என்னவென்று தெரியாத வயது. ஆனால் பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு விவரம் தெரியும். அவர்கள் ஒன்றும் பாப்பா கிடையாது.
பல ஆண்டுகளாக அவரை ஏமாற்ற ஸ்ரீ ரெட்டி ஒன்றும் குழந்தை இல்லையே. அவருக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஸ்ரீ ரெட்டியின் இந்த வீடியோவை பாருங்கள் என்று செய்தியாளர்களிடம் ஒரு வீடியோவை தனது செல்போனில் காண்பித்தார் ஜீவிதா.
ஜீவிதா காண்பித்த வீடியோவில் ஸ்ரீ ரெட்டி, தான் 24 மணிநேரமும் செக்ஸி மூடிலேயே இருப்பதாக கூறியுள்ளார். இதை பார்த்த பிறகுமா ஸ்ரீ ரெட்டியின் பேச்சை நம்புகிறீர்கள் என்று ஜீவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜீவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தது போன்றே காவல் நிலையத்திற்கு சென்று சந்தியா மற்றும் அந்த பிரபல டிவி சேனல் மீது புகார் அளித்துள்ளார்.
Actress Jeevitha Rajasekhar rubbished the allegations made by social activist Sandhya in a TV debate. She has asked Sandhya to prove it.
#jeevitha #srireddy #srileaks

Category
🗞
News