ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நடத்தினர். போலீசார் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தது இந்த பேரணி.
Category
🗞
News