• 7 years ago
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கவும், வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசும் வருமான வரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக வருமான வரித்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அதாவது வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக தகவல் தருவோருக்கான சன்மானத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.


Income tax department has announced reward scheme to reduce tax evasion.

Category

🗞
News

Recommended