திம்பம் மலைப்பாதையில் வனத்துறை சார்பில் காட்சிமுனை கோபுரம் கட்டும் பணி- வீடியோ

  • 5 years ago
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 19 வது கொண்டை ஊசி வளைவு அருகே வனத்துறை சார்பில் காட்சிமுனை கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வன சுற்றுலா திட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்று வனத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக திம்பம் மலைப்பாதையில் 19 வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள மலை உச்சியில் காட்சிமுனை கோபுரம் கட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி முனை கோபுரத்தின் மீது ஏறி பைனாகுலர் மூலம் சத்தியமங்கலம் வனப்பகுதியை கண்டு ரசிக்கலாம். இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற பின் சுற்றுலாப் பயணிகள் காட்சிமுனை கோபுரத்தின் மீது ஏறி புலிகள் காப்பக வனப்பகுதியை கண்டு ரசிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

DES {: Construction of the Vision Tower to the Forest Department near the 19th cylinder injection curve at Thimpu Hill, next to Sathyamangalam in Erode district

Category

🗞
News

Recommended