#BOOMINEWS | தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்ரம சிங்க ராஜா விருதுநகரில் அதிரடி |

  • 3 years ago
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்க்க முடியாத ஒன்று இதனால் மளிகை பொருள்களில் இருந்து அத்தியாவாசிய பொருள்கள் வரை விலை உயர்கிறது.பெட்ரோல் டீசல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். விரைவில் ஆட்சி மன்ற குழு கூட்டி போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்ரம சிங்க ராஜா பேட்டி...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்ரம சிங்க ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் விழும் மூலிகை தண்ணீரில் பொதுமக்கள் குளித்தால் நோய்கள் குணமாகும் என ஐதீகம் உள்ளது. எனவே குளிப்பதற்க்கான தடையை நீக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர் அதை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்துப் பகுதிகளும் சீரான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் இது குறித்த கோரிக்கையை முதல்வரிடம் அளிக்க உள்ளோம். கொரோனா காலகட்டங்களில் உயிரை துச்சமென மதித்து சேவை செய்து உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்., திமுகவின் 100 நாள் ஆட்சி பாராட்டும் வகையில் சிறப்பான காட்சியாக உள்ளதாகவும் வரியில்லாத பட்ஜெட்டை வழங்கியுள்ளதற்கு வரவேற்பதாகவும்., வியாபாரிகள் பெற்றுள்ள கடனை வங்கி மூலமாக செலுத்த டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும். தடை காலங்களில் வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளை எந்த நிபந்தனைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யபட வேண்டும் என வலியுறுத்துகிறோம். கொரோனா பேரிடர் காலத்தில் மாநிலம் முழுவதும் வியாபாரிகள் காவல்துறை,சுகாதரத்துறை,மாநகராட்சி, நகராட்சி ஆகிய நான்கு துறைகள் மூலம் அச்சுறுத்தபடுகிறோம். இதில் காவல்துறை வியாபாரிகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.வியாபாரிகளை ஒரு துறை அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்க்க முடியாத ஒன்று இதனால் மளிகை பொருள்களில் இருந்து அத்தியாவாசிய பொருள்கள் வரை விலை உயர்கிறது. பெட்ரோல் டீசல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். விரைவில் ஆட்சி மன்ற குழு கூட்டி போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றார். டோல்கேட் கட்டண உயர்வு என்பதை அரசு அமுல் படுத்தக் கூடாது ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Recommended