குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினரே பாஜகவுக்கு சாதகமாக ரகசியமாக செயல்பட்டு வருவதாக சொல்லி நேரடியாக வைத்து வார்னிங் கொடுத்துள்ளார் ராகுல்காந்தி. கட்சியை சுத்தம் செய்ய தேவைப்பட்டால், 40 தலைவர்களை நீக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என அதிரடி காட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பாஜக பக்கம் தாவி வருவது பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. எம்.எல்.ஏக்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் பாஜக விலை பேசி வாங்கி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குஜராத் காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் தலைவர்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக ரகசியமாக செயல்பட்டு வருவதாக சொல்கின்றனர்.
இந்த விவகாரம் காங்கிரஸ் தலைமை வரை சென்றுள்ளது. அதனால் உடனடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளார் எம்.பி ராகுல்காந்தி. குஜராத் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை ரேடாரில் வைத்திருந்த ராகுல், அவர்களிடம் நேருக்கு நேர் வார்னிங் கொடுத்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். அப்போது, ‘பாஜக ஆளும் மாநிலத்தில், காங்கிரஸ் பல தசாப்தங்களாக ஆட்சியில் இல்லை. கட்சியை சுத்தம் செய்வதற்காக, தேவைப்பட்டால், 40 தலைவர்களை நீக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது. மக்களுடன் உண்மையிலேயே இணைந்திருப்பவர்கள் மற்றும் மக்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் என தலைவர்களை 2 குழுக்களாக பிரிக்க வேண்டும். காங்கிரசில் பாஜகவுக்காக ரகசியமாக வேலை செய்பவர்கள் வெளியே வர வேண்டும், பாஜகவுக்காக வெளிப்படையாக வேலை செய்ய வேண்டும். அவர்களைப் பார்ப்போம். பாஜகவிடம் உங்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் உங்களை வெளியே தூக்கி எறிவார்கள். குஜராத் மக்களுடன் நாம் இணைய வேண்டும் என்றால், ஒரு முன்மாதிரியாக இருக்க 40 தலைவர்களை நீக்க கூட நாங்கள் தயார் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
ராகுல்காந்தி வெளிப்படையாகவே இப்படி சொன்னது குஜராத் சீனியர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் பேசுகையில் ராகுல் காந்தியின் பேச்சு வெளிப்படையாகப் பேசுவதற்கான தைரியத்தை அளிக்கிறது. எனக்கு கட்சியில் எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. எனக்கு எந்தப் பங்கும் இல்லை, அதனால்தான் நான் டெல்லியில் இருக்கிறேன். என்னைப் போன்ற தொண்டர்களை அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக வேலை வாங்கிய பலர் கட்சியில் உள்ளனர். இதன் காரணமாக கட்சி பலவீனமடைந்தது.
ராகுல் கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதனால்தான் நாங்கள் கட்சிக்காக உழைக்க விரும்புகிறோம். ஆனால் வாய்ப்பு கிடைக்காது என்று தைரியமாகச் சொல்கிறேன்.” எனத் தெரிவித்தார். ராகுல்காந்தியின் வார்னிங்கை அடுத்து குஜராத் காங்கிரஸில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

Category
🗞
News