• 15 hours ago
விக்ரமன் பெண் வேடமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோபமாகியுள்ளார் விக்ரமன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விக்ரமன் பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் முடிந்த சில மாதங்களில் கடந்த 2023ல் விக்ரமன் காதலிப்பதாக கூறியும், பணம் மற்றும் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொண்டும் மோசடி செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் குற்றம்சாட்டியது பரபரப்பை கிளப்பியது.

இந்தநிலையில் விக்ரமன் பெண்களின் ஆடையணிந்து சென்று இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்தது. அந்த வீடியோவில் விக்ரமன் ஓடுவது போலவும், அவரை பிடிக்க சிலர் துரத்துவது போலவும் இருந்தது. இதற்கிடையே பிரபல இயக்குநர் ராஜுமுருகன் வசிக்கும் ஐயப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் தொல்லைகள் நடப்பதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார். 2024ம் ஆண்டு வரை அந்த குடியிருப்பில் வசித்த விக்ரமனுக்குல் அதில் தொடர்பு இருப்பதாக விமர்சனம் எழுந்தது. விக்ரமன் பெண் ஆடையுடன் இருக்கும் வீடியோவையும் இந்த தகவலையும் இணைத்து பலரும் தகவல் பரப்பினர்.

இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் விக்ரமனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்தநிலையில் இந்த விவகாரத்தில் விக்ரமனே விளக்கம் கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எந்த இயக்குனரின் இயக்கத்தில் உருவான படத்தின் படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டது? எப்போது இதன் படப்பிடிப்பு நடந்தது? என்பது குறித்த எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. எந்த படப்பிடிப்பு என்பதற்கான ஆதாரம் இல்லாமல் விக்ரமன் பேசுவதாக கமெண்டில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Category

🗞
News

Recommended