• 8 years ago
மக்கள் பிரச்சினைகளை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த கவனம் தேவை. இல்லையென்றால் அந்தப் படம் மோசமான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும். அறம் படமும் மக்களின் முக்கியப் பிரச்சினையைத்தான் பேசுகிறது. கோபி நயினாரும் நயன்தாராவும் இந்தப் படத்தை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள்? நீண்ட நாள்களுக்குப் பிறகு மக்கள் பிரச்சினைகளை வைத்து பளிச்சென்று எந்த வணிக சமரசமும் இல்லாமல் ஒரு படம் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் கோபி நயினார், அவருக்கு இப்படி ஒரு வாய்ப்புத் தந்த நயன்தாரா இருவருமே வாழ்த்துக்குரியவர்கள். தமிழகத்தின் வடக்கு எல்லையில் உள்ள காட்டூர் ஒரு பக்கா கிராமம். குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத அந்த கிராமத்தில் வாழ்க்கையோடு போராடுகிறது சுனு லட்சுமியின் குடும்பம். வேலைக்குப் போகும்போது கூடவே நான்கு வயது மகளையும் அழைத்துப் போகிறாள் சுனுலட்சுமி. அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்துவிட, குழந்தையை மீட்கும் பணிக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியரான நயன்தாராவே வந்துவிடுகிறார். பொதுமக்கள், சக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், மீடியா பரபரப்புகளைத் தாண்டி அவரால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மீதி.

Review of Nayanthara starring, Gopi Nayinar directorial Aramm

Recommended