• 7 years ago
காமராஜர் சிலைக்கு மாலை, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை என ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷால் அலப்பறையை கூட்டும் போதே நாடார் மற்றும் அதிமுக வாக்களை பிரிக்கத்தான் இந்த கூத்து என்பது அரசியலைத் தெரிந்த சிறுபிள்ளைக்கும் கூட புரியாமல் இல்லை.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷால், இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போயிருந்தார். அது சில கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளது.ஆர்.கே.நகரின் பலமான வாக்கு வங்கியில் ஓட்டையைப் போடும் வகையிலான அவரது மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது. அவரது இலக்கு யார் என்பதையும் ஒரு வகையில் ஊகிக்கவும் இது வகை செய்துள்ளது. அதிமுக வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்பதே விஷாலின் நோக்கமாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், ஆர்.கே.நகரில் பெருவாரியாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளையும் அவர் பறிக்க முயல்கிறார்.

திடீர் இட்லி திடீர் தோசை போல திடீர் வேட்பாளர் ஆகியுள்ளார் விஷால். சுயேச்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் இறங்கியுள்ளார். அவராக இறங்கியிருக்கிறாரா அல்லது யாரேனும் இறக்கி விட்டுள்ளனரா என்று தெரியவில்லை.



Actor Vishal will be filing the nomination in the R.K. Nagar bypoll on Monday. Vishal visited the Kamraj statue, MGR’s residence and Jayalalithaa memorial, before filing the nominations.

Category

🗞
News

Recommended