• 8 years ago
கத்தி முனையில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து நகைகளையும் கொள்ளையடித்த, காமுகனை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த வில்லியம்ஸ் நேற்று தனியாக நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த வாலிபன் ஒருவன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.8,500 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடியுள்ளான்.
இதுகுறித்து வில்லியம்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, கிண்டி, வேளச்சேரி, குமரன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்.
இந்த நிலையில், குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், திடீரென பைக்கின் வேகத்தை கூட்டி தப்பிக்க முயன்றார் ஒரு வாலிபர். சந்தேகத்தின்பேரில் போலீசார் அந்த பைக்கை மடக்கிப் பிடித்தனர்.

A 28-year-old man was arrested for robbing people and raping women at knife-point at Chennai, which he also videotapped in his mobile phone

Category

🗞
News

Recommended