• 7 years ago
தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து வந்தது. இதனால் நெட்டிசன்கள் மத்தியில் வெகு பிரபலமானது. பல்வேறு திருட்டு வீடியோ வெப்சைட்டுகளை தடை செய்தபோதிலும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை தடை செய்ய முடியவில்லை. வேறு பெயர்களை மாற்றிக்கொண்டாவது அந்த இணையதளம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கேரள வீடியோ பைரசி பிரிவு போலீசார், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை நிர்வகித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில் உரிமையாளரும் அடங்கும் என்கிறது கேரள காவல்துறை வட்டாரம். கார்த்தி, பிரபு, சுரேஷ், ஜான் ஆகிய நால்வர்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tamil rockers website admin has been arrested by Kerala police, says Reports.

Category

🗞
News

Recommended