• 8 years ago
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் ஏ1 (குற்றவாளி 1). மற்றவர்கள் 3 பேரும் அவருடன் இருந்தவர்கள் மட்டுமே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என 187 இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்களும், தங்க நகைகளும், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. டிடிவி தினகரனுக்கு சொந்தமான புதுவை பண்ணை பங்களாவில் ரெய்டு நடந்தபோது , ரெய்டு நடப்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும் பண்ணை வீட்டில் சாணமும், உரமும்தான் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ரெய்டு குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என கிருஷ்ணபிரியா கூறியது அச்சத்தின் காரணமாகத்தான். ஆனால் உள்நோக்கம் இல்லை என்று விவேக் கூறியதாக நான் டிவியில் பார்க்கவில்லை.

TTV Dinakaran says that Jayalalitha was no 1 accused in DA case. Others who are in prison are only they were with Jayalalitha

Category

🗞
News

Recommended