ஏழரை சனி...சோதனை வந்தாலும் நன்மைதான்! #சனிப்பெயர்ச்சி-வீடியோ

  • 7 years ago
ஏழரை சனி பிடித்தால் எல்லோருக்கும் கெடுதலை செய்யாது. நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான்.
சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம். இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும்.

இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பாதசனி. தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி. மகரம் ராசிக்காரர்களுக்கு விரயச்சனியாக தொடங்குகிறது.

ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.ஒருவரின் ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை 'விரயச் சனி' எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை 'ஜென்மச் சனி' என அழைப்பர். ராசிக்கு 2ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு கால கட்டத்தை 'பாதச் சனி' என்றும் அழைக்கிறார்கள்.

விருச்சிக ராசிக்கு இதுநாள் வரை ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார். இன்னல்கள் நிறைந்த கால கட்டமாக இருந்தது. எங்குமே துன்பங்கள் நிறைந்த கால கட்டமாக இருந்தது. ஜென்மசனி கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள்.ஏழரை முடியும் போது பலவித நல்ல பலன்களை கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான்.

Shanaiswara, or Shani, Saturn completing one cycle every 30 years. Elarai sani mantras and parikarams. Worship Lord Hanuman by chanting his mantras on Saturday and lighting a ghee lamp.

Recommended