• 7 years ago
ரத்தக் கொதிப்பு! இதய நோயைக் காட்டிலும் ஆபத்தான நோய் இது. ரத்தக் குழாய் சுருங்குவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் , மரபியல் ஈதியாக என உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. எப்படியும் சாகத்தான் போகிறமென சொல்லிக் கொண்டு ஆகாததையெல்லாம் சாப்பிட்டு, கண்ட நோய்களை வரவழைத்துக் கொண்டு மாத்திரை, மருந்துகளோடுதான் சாவது சந்தோஷமா? அதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால், எந்த நோயும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்துவிட்டுப் போலாமே.. ஏனென்றால் உயர் ரத்த அழுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரத்தம் சீராக பாய்வது தடைப் பட்டு (ஏதாவது தடங்கலினால்) திடீரென அழுத்தம் அதிகரித்து வேகமாக பாய்வதால் ஏற்படுவதுதான் ரத்த அழுத்தம். ரத்த அழுத்தத்தை சரியாக கவனிக்கவில்லையென்றால் அவை இதய நோய், பக்க வாதம். மூளை நோய்கள் என கோமா வரை கொண்டு செல்லும். ரத்தக் கொதிப்பு வராமல் காக்க வேண்டியது உங்கள் கையில்தான் இருகிறது. நல்ல வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை தேர்ந்தெடுங்கள்.


Foods that help you to control Blood pressure

Recommended