• 7 years ago
குழந்தை என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரமாகும். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால், அந்த காரியம் வெற்றியடையும். அதே போல உங்களது வாழ்க்கையில் குழந்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ விரும்பினீர்கள் என்றால், கர்ப்பமாவதற்கு முன்னால் நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. இவற்றை எல்லாம் செய்தால் உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதோடு, கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்கலாம்.நீங்கள் கர்ப்பமாவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஒரு கவுண்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் குழந்தை பெற மனதளவில் தயாராகலாம்.
உங்களது மாதவிடாய் ஒழுங்கான முறையில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே நீங்கள் உங்களது மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மருத்துவரின் ஆலோசனைப் படி சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சரி செய்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இதனால் உங்களுடைய கர்ப்பமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு கர்ப்ப காலத்தில் வரும் 99% பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியமாகும். உங்களது அன்றாட உணவுகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் கட்டாயமாக இருக்க வேண்டியது அவசியமாகும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.


You Should Do Things Before Pregnancy for Healthy Baby

Category

🗞
News

Recommended