• 7 years ago
ஆண்டாள் மகாலெட்சுமி அவதாரமாக பெரியாழ்வாரின் நந்தவனத்தில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பாவை நோன்பிருந்து அந்த இறைவனையே கணவராக அடைந்தார். தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும் எங்கின்றன சாஸ்திரங்கள். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து திருப்பாவை நோன்பு ஏற்றாள். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக வளர்ந்த ஆண்டாள் சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது தீராத காதல் கொண்டு திருப்பாவை மற்றும் நாச்சியார் திருவாய்மொழி இயற்றியவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த மார்கழி மாதத்தில் நடைபெரும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆண்டாளின் திருப்பாவை கொண்டே அனைத்துக் கோயில்களிலும் மார்கழி மாதம் பெருமாளை வழிப்படுகிறார்கள். திருமலை திருப்பதியில் மார்கழி உற்சவத்தில் அதிகாலை சுப்புரபாதம் பாடுவதற்குப் பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.

This is a story which talks about the devotions of Periaazhvaar and his daughter, Andal who wanted to marry Vishnu.

Category

🗞
News

Recommended