• 8 years ago
ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் வந்திருந்தார்.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார்.
ஸ்ருதி தனது காதலரான மைக்கேல் கோர்சேலையும் உடன் அழைத்து வந்திருந்தார்.லண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை கட்டி மாப்பிள்ளை மாதிரி திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.திருமண நிகழ்ச்சியின்போது மைக்கேலும், ஸ்ருதியும் ஜோடியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.ஸ்ருதியும், மைக்கேலும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் ஜோடியாக திருமணத்திற்கு வந்துள்ளனர். மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்துள்ளனர்.

Actress Shruti Haasan attended Aadhav Kannadasan's wedding with her alleged boyfriend Michael Corsale. Kamal Haasan also accompanied them.


Category

🗞
News

Recommended