• 7 years ago
நடிகை நிவேதா பெத்துராஜ் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்வாக இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென்று ட்விட்டர் வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 'ஒரு நாள் கூத்து' படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஷ்ணு விஷாலுடன் 'ஜெகஜால கில்லாடி' படத்திலும் நடித்து வருகிறார்.நிவேதா பெத்துராஜ், சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். ஆனால், சில தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகளால் மனம் வருந்திய நிவேதா, திடீரென தனது ட்விட்டர் அக்கவுன்ட்டைன்டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார். நிவேதா பெத்துராஜ் டீ-ஆக்டிவேட் செய்தது அவரது ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார் நிவேதா.

Actress Nivetha pethuraj deactivated her twitter account.

Category

🗞
News

Recommended