• 8 years ago
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த கவுனின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது. தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் தங்க நிற அலெக்சிஸ் மேபில் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார். அந்த டிசைனர் கவுனின் விலை தெரிய வந்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனின் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரத்து 905 மட்டுமே. அடேங்கப்பா, ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு விலை உயர்ந்த உடையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.
அதுல் மஞ்ச்ரேகர் இயக்கி வரும் ஃபேனி கான் என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.
மகள் ஆராத்யாவை இனி தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வதை நிறுத்தப் போவதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Bollywood actress Aishwarya Rai attended a party thrown by Mukesh Ambani with her hubby Abhishek Bachchan. Aishwarya wore a Alexis Mabille strapless gown worth Rs. 3.7 lakhs.

Category

🗞
News

Recommended