லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாக அஞ்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • 6 years ago
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி அஞ்சனாவின் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அஞ்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அழகிற்காகவே அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது இனி தான் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாக அஞ்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா. அவரது தமிழ் உச்சரிப்பு, இனிமையான பேச்சு காரணமாக அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமே இருக்கிறது. தற்போது இனி தான் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாகவும், இதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பிரேக் எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் அஞ்சனா. தொகுப்பாளினி அஞ்சனா சன் மியூசிக்கிலிருந்து விலகுவதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை அதிகமாக மிஸ் பண்ணப்போவதாக ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவரது அடுத்தக்கட்ட நகர்வுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

VJ Anjana has been host sun music show for many years. Anjana has said that she is now out of Sun music channel that has been hosted for more than 10 years and is thankful to all who supported it.

Category

🎵
Music

Recommended