• 7 years ago
இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளதை பாராட்டியும் அதே சமயம் ஒருவரை கலாய்த்தும் ட்வீட்டியுள்ளார் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்துள்ளது. இந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ருவழியாக... பத்மவிபூஷனுக்கு இளையராசா கிடைத்த மகிழ்ச்சியில் நாளை மிட்டாய் வழங்கி பூக்கள் தூவி சிறகடித்து பறக்கிறது -நம் தேசியக்கொடி எழுந்து நின்று மரியாதை செய்ஓம்! இசைக்குள் ஆழ்தலும் தியானமே! என ட்வீட்டியுள்ளார் பார்த்திபன். இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா என வாழ்த்தியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதியான விருதுகள். என் இதயபூர்வ வாழ்த்துக்கள் என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.

Kollywood celebrities have wished Isaignani Ilayaraja for getting Padma Vibushan award. Central government has announced the Padma awards last night.

Category

🗞
News

Recommended