• 7 years ago
ரஜினிகாந்துக்காக மட்டுமே பக்கா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
புதுமுகம் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, ஆனந்த்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பக்கா. இந்த படத்தை தயாரித்துள்ள டி. சிவக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். பக்கா படத்தில் நிக்கி கல்ராணி ரஜினிகாந்தின் தீவிர வெறியையாக நடித்துள்ளார். ரஜினிகாந்துக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நிக்கி தெரிவித்துள்ளார். பக்கா படம் பக்காவான காமடெி படம். இந்த படம் மூலம் விக்ரம் பிரபு காமெடி பண்ண முயற்சி செய்துள்ளார். இரட்டை வேடம், காமெடி என்று இரு விஷயங்களை கையில் எடுத்துள்ளார் விக்ரம் பிரபு.

Nikki Galrani said that she has decided to act in Vikram Prabhu starrer Pakka movie only for superstar Rajinikanth. She has acted as an ardent fan of Rajinikanth in the movie.

Recommended