ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை கேட்பதற்காக ரசிகர்கள் காலை முதலே உற்சாகமாக கூடினர். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிக்க உள்ளதையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் காலை முதலே திரண்டு வந்தனர். காலை 8.40 மணியளவில் ரஜினி போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ரஜினி இன்று சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார். இதற்காக காலை முதலே அடையாள அட்டைகளுடன் ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் காத்திருந்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலுடன் ரசிகர் மன்ற கொடியை கையில் ஏந்திக் கொண்டு உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
நாங்கள் 30 ஆண்டுகளாக ரஜினி ரசிகராக இருக்கிறோம் ரஜினி 2018ல் அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் திருமண மண்டபத்திற்குள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ராகவேந்திரா மண்டபத்திற்குள் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டு அதில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தன. மேலும் ரஜினியின் பேச்சு தொகுப்புகளும் அப்போது வெளியிடப்பட்டன.
Rajinikanth fans eagerly gathered in Ragavendra Kalyana mandapam to hear his today's announement, many were much awaiting for his political entry.

Category
🐳
Animals