• 7 years ago
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் 4வது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர், எனினும் தீ பரவியதால் அலுவலகம் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Category

🗞
News

Recommended