அந்த ஏழு நாட்கள்!- வீடியோ

  • 6 years ago
'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நெடுநாள்களாவே நினைத்திருந்தேன். அந்தப் படத்தை எப்படித் தவிர்க்க முடியும் ? திரைக்கதையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரேயொரு படத்தைத்தான் கூற வேண்டும் என்றால் என் தேர்வு 'அந்த ஏழு நாட்கள்'தான். படத்தின் சிறப்புகள், திரைக்கதை உத்திகள், முன்பின் காட்சியமைப்புத் தொடர் நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பலரும் பலவிதமாக வியந்து கூறிவிட்டார்கள். சந்திரபாபு என்னும் நடிகரின் வாழ்வில் நடந்ததாய்க் கூறப்படும் ஒரு நிகழ்ச்சியை வைத்து இப்படியெல்லாம் திரைக்கதை எழுத முடியுமா? பாக்கியராஜ் அதைச் செய்து காட்டினார். அப்படத்தில் எல்லாரும் வியந்து கூறிய பல கூறுகளையே நாமும் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இன்றைக்கு நகைச்சுவையின் பல்வேறு வகைமைகளைக் குறித்துப் பேசுகிறார்கள். அந்த ஏழு நாட்களில் இடம்பெற்றிருந்ததைப் போன்ற 'துன்புறு முரண் நகைச்சுவைக் காட்சிகள்' அன்றைய காலத்தில் மிகப்புதிது. அந்தத் தரத்திலான நகைச்சுவைக் காட்சிகளை வேறு எந்தப் படத்திலும் நாம் பார்க்க வாய்க்கவில்லை. படத்தை உயர்த்தி நிறுத்தியது ஒவ்வொரு காட்சியிலும் நடுநரம்பாய் ஊடாடியிருந்த அத்தகைய நகைச்சுவைக் காட்சிகளே. அவற்றுள் சில காட்சிகளைப் பார்ப்போம். வசந்தி ஒரு பூங்காவின் வழியே வந்துகொண்டிருக்கும்போது மாதவனின் உதவியாள் கோபியைப் பார்ப்பாள். பூங்காக்காரனிடம் வெறுந்துண்டைக் காட்டி "இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்துங்க..." என்று கேட்டுக்கொண்டிருக்கும் கோபியைத் தன்னருகே அழைப்பாள். "என்னடா... நீ மட்டும் தனியா சுத்திட்டிருக்கே ? உன் ஆசான் எங்கே ?"


K Bagyaraj's Antha 7 Naatkal is the best example for a perfect screenplay.

Recommended