• 7 years ago
ஜாக்கிசான் தயாரித்து, நடித்துள்ள புதிய படம் 'ப்ளீடிங் ஸ்டீல்'. லியோ சாங் இப்படத்தை இயக்கி உள்ளார். ஜாக்கி சானுடன் ஷோலூ, ஓயாங் நானா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பெய் பெங் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டோனி சேங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது மெடிக்கல் க்ரைம் திரில்லர் படம் ஆகும். வினோத வில்லன், எல்லா சக்தியும் படைத்த வில்லி. அவர்களை எதிர்த்து போராடும் சீக்ரெட் ஏஜென்ட் ஜாக்கிசான். இவர்கள் மூவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜாக்கிசானின் மகள் என பரபரப்புடன் வேகமெடுக்கும் திரைக்கதையை கொண்டது.
அதிரடி சேசிங் காட்சிகள் தான் இப்படத்தின் ஸ்பெஷல். கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி சீனாவில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது 'ப்ளீடிங் ஸ்டீல்'. வருகிற பிப்ரவரி 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழியில் வெளியாகிறது. தமிழில் கே.ஆர்.எஸ்.சினிமா சார்பில் கே.ரவி, எஸ்.பிலிம்ஸ் கார்பரேஷன் சார்பில் சேலம் பி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

Category

🗞
News

Recommended