இமயமலையில் இந்த சூழலில் நான் ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு 5வது நாளாக பல தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் மேலும் 20 நாட்கள் வரை இமயமலைப் பகுதிகளில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இன்று ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி மடத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதுக்களுக்கு அன்னதானம், குரு தட்சிணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரஜினி. நூற்றுக்கணக்கான சாதுக்களுக்கு தன் கையால் உணவும் பணமும் வழங்கினார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், "இமய மலைப் பயணம் மிக இனிமையாக உள்ளது. இங்குள்ள இறைத்தன்மையை நான் அனுபவித்து மகிழ்கிறேன். இங்குள்ள ஆன்மீகப் பெரியவர்கள், சாதுக்கள் மத்தியில் இருக்கும் இந்த சூழல் நான் ரஜினிகாந்த் என்பதையே மறக்க வைத்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, மன நிறைவுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்," என்றார் ரஜினிகாந்த்.
Rajinikanth, who is now on his Himalayan trip says that he is enjoying the trip and completely forgotten himself.
Rajinikanth, who is now on his Himalayan trip says that he is enjoying the trip and completely forgotten himself.
Category
🗞
News