• 6 years ago
கடற்கரையில் உயிருடன் ஒதுங்கிய பவளப்பாறை பாம்புகள் மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்த நிலையில். கடலூர் மாவட்ட கடற்பரப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் அலைகள் காணப்பட்டது. ஆனால் கடலூர் தாழங்குடா கடற்கரையில் ஆழ்கடலில் மட்டும் பவளப்பாறையில் வசிக்கும் பாம்புகள் உயிருடன் கரையில் இருந்தது மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த பாம்புகளை மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டாலும் அவை கரை நோக்கியே வந்தது, இதைப்போன்ற தாங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை 12 இடங்களில் இந்த பாம்புகள் காணப்பட்டது, மேலும் தாழங்குடா பகுதியில் அழுகிய நிலையில் ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது, கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த பாம்புகள் கரைஒதுங்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். வானிலை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலத்தில் மீன்பிடிக்க செல்லும் நாட்டு படகுகளும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

DES : Survivors of the fisherman's snake on the beach surprised the fishermen.

Category

🗞
News

Recommended