• 7 years ago
காருக்குள் வைத்து பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி வடக்கு மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மீது டவுன்சிப், தெர்மல் உள்ளிட்ட பல காவல்நிலையத்தில் கொலை கொள்ளை ஆள்கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை வழக்கில் கைதான ஐயப்பன் சிறையில் இருந்து 15 நாட்களுக்கு முன்னர் தான் வெளியே வந்துள்ளார். நேற்று இவர் நெய்வேலி உளி தெருவில் உள்ள காலி மனையில் தனது காரில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஐயப்பனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஐயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துவதுடன் தலைமறைவான கொலையாளிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des : The killing of the famous Rowdy gang into the car has created a stir.

Category

🗞
News

Recommended